பேரிகை அருகே ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்
பேரிகை அருகே ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்;
கிருஷ்ணகிரி மாவட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை உதவி இயக்குனர் வர்ஷா மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் பேரிகை அடுத்துள்ள புக்கசாகரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது புக்கசாகரம் பகுதியிலிருந்து ஓசூருக்கு அனுமதி இன்றி இரண்டு யூனிட் ஜல்லியை கொண்டு செல்வது தெரிய வந்தது. அதை அடுத்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து பேரிகை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்