உத்தனப்பள்ளி அருகே டூவீலர் கவிழ்ந்தது டிசைனிங் என்ஜினீயராக உயிரிழப்பு.
உத்தனப்பள்ளி அருகே டூவீலர் கவிழ்ந்தது டிசைனிங் என்ஜினீயராக உயிரிழப்பு.;
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகேயுள்ள ஈச்சம்பாடி பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (26) இவர் பெங்களூருவில் டிசைனிங் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் கிருஷ்ணகிரி மாவட்டம் சானமாவு அரசு உயர்நி லைப்பள்ளி பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து டூவீலர் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் முகேஷ் பலத்த காயம் அடைந்த நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் உத்தனப்பள்ளி போலீசார் முகேசின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கண்டு வருகின்றனர்.