மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து, ஒவ்வொரு ஊராட்சிகளிலும் சுழற்சி முறையில் பணியாளர்களுக்கு பணி வழங்கிட வேண்டும்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது.;
பெரம்பலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 08.07.2025 நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட ஊரக விளையாட்டு மையங்கள், புதிய குளங்களை உருவாக்குதல், அரசு அலுவலகங்களுக்கு முறையாக சுற்றுச்சுவர் கட்டுதல், தேவைப்படும் இடங்களில் குழந்தைகள் மையங்கள், நியாயவிலைக் கடைகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியம் வாரியாக ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளும் நிர்வாக அனுமதி வழங்கிய நாள் முதல் பணி முடிக்கும் கால அளவு நாட்களுக்குள் முடித்திட வேண்டும். மேலும்,தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் அனைத்தும் விரைந்து முடித்திட வேண்டும். இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்ந்தெடுத்து வழங்கிடுவதை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். வளர்ச்சி பணிகளை ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் நேரில் சென்று அதிக பணிகளை ஆய்வு செய்திட வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஒவ்வொரு வாரமும் பணி நடைபெற்று வருவதன் முன்னேற்ற நிலை குறித்து ஆய்வு செய்து வட்டார அளவில் தொடர்புடைய அலுவலர்களுடன் வாராந்திர கூட்டம் நடத்தி பணிகள் அனைத்தும் முடித்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து, ஒவ்வொரு ஊராட்சிகளிலும் சுழற்சி முறையில் பணியாளர்களுக்கு பணி வழங்கிட வேண்டும். மேலும், குடிநீர் திட்டப் பணிகள், தூய்மை பாரத இயக்கப் பணிகள், இதர சுகாதார பணிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை தரமாகவும், விரைந்தும் மேற்கொள்ள வேண்டும். சென்ற நிதியாண்டில் வழங்கப்பட்டுள்ள அனைத்து வளர்ச்சித் திட்டப் பணிகளும் இம்மாதத்திற்குள் முடித்திட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பி.ஷாஹிதா, உதவி செயற்பொறியாளர்கள் அசோக்குமார் (சாலைகள் மற்றும் பாலங்கள்), விமலாதேவி, மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார உதவி பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.