அரசு மருத்துவகல்லூரியில் பாஜக ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி;

Update: 2025-07-08 10:16 GMT
குமரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் கோப குமார் தலைமையில் மருத்துவ கல்லூரியில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மாநில மகளிர் அணி தலைவி உமாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மற்றும் நாகர்கோவில் மேற்கு மாநகர தலைவர் சதீஷ் நன்றி உரை வழங்கினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கன்யாகுமரி பாஜக கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News