புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்,மேலூர்,சாஸ்தா நகரை சேர்ந்தவர் கலைமணி(39) இவருக்கு திருமணம் ஆகி 25 வருடமான நிலையில் ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக நேற்று மது போதையில் திடீரென்று அவரது வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரில் திருமயம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.