காங்கேயம் அரசு கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
காங்கேயம் அரசு கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் காங்கேயம் காவல் ஆய்வாளர் செல்வநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்;
நத்தக்காடையூர் அருகே உள்ள முள்ளிப்புரம் காங்கேயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கி.ஜெயந்தி தலைமை தாங்கினார். வணிக நிர்வாகவியல் துறை தலைவர் ப.கொமரசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். முகாமில் காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், தலைமை போலீஸ் காவலர் சாந்தகுமாரி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு, போதை பொருள் ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்புக்காக மேற்கொள்ளும் வழிமுறைகள் ஆகியவைகள் பற்றி விரிவாக விளக்கி கூறினார்கள். முகாமில் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் நளினி நாட்டு நலப்பணித் திட்ட செயல்பாடுகள் மற்றும் வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் ராமசாமி கல்லூரி விளையாட்டு போட்டிகள் ஆகியவைகள் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்கள். முகாம் நிறைவாக சாலை பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.