தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தாராபுரம் அண்ணா சிலை அருகே தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்;
தாராபுரம் அண்ணா சிலை அருகே தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்திற்கு தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் வினோத்குமார், நகரச் செயலாளர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ் புலிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளோடு இணைந்து தாராபுரம் அலங்கியம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னாக்கால்பாளையம் பகுதியில் ஆதிதிராவிடர் இளைஞர் முருகனை படு கொலை செய்த கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.