அடையாளம் தெரியாத கார் மோதி, முதியவர் பலி

குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத கார் மோதி, முதியவர் பலியானார்;

Update: 2025-07-08 15:06 GMT
குமாரபாளையம் வட்டமலை, திருவள்ளுவர் நகரில் வசித்து வந்தவர் முத்துவேல், 70. கூலி. இவர் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தன் தங்கை வீட்டிற்கு வந்து பார்த்து விட்டு, நேற்றுமுன்தினம் இரவு 07:15 மணியளவில் வட்டமலை, தனியார் கல்லூரி எதிரில் ஷேர் ஆட்டோவில் வந்து இறங்கி, சேலம், கோவை புறவழிச்சாலையை நடந்து கடந்தார். அப்போது கோவை பக்கமிருந்து வேகமாக வந்த கார் ஒன்று, இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த இவரை அக்கம் பக்கத்தினர், தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த இவரது குடும்பத்தினர் நேரில் வந்தனர். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் இறந்து விட்டர் என்று கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான கார் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News