கலெக்டர் அலுவலகத்திற்கு அரசு பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை.
பரமத்தி வேலூர்-நாமக்கல் கலெக்டர் அலுவலகம் புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை.;
பரமத்திவேலூர் ஜூலை.8: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பரமத்தி மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை, நீதிமன்றம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு செல்வதற்கு பரமத்தி வேலூரில் இருந்து நாமக்கல் புதிய பஸ் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து நாமக்கல் கலெக்டர் அலு வலகத்திற்கு திருச்செங்கோ டு மார்க்கமாக செல்லும் பஸ் மூலம் செல்ல வேண்டி உள்ளது. இதனால் நேரம் விரயம் ஆவதுடன் மாற்றுத்திறனாளிகள், பெண்கள், வயதான மூத்த குடிமக்கள் உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்ல மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பரமத்திவேலூர் பஸ் நிலையத்திலிருந்து பரமத்தி, பிள்ளைகளத்தூர், வில்லி பாளையம், சுங்கக்காரன்பட்டி, எர்ணாபுரம் வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் வகையில் புதிய வழித்தட த்தில் அரசு பஸ் இயக்க வேண்டும் எனவும் இதனால் அப்பகுதியில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் நாமக்கல் திருச்செங்கோடு பரமத்திவேலூர் உள்ளிட்ட நகர பகுதிகளுக்கு பணிக்கு செல்லும் பெண்கள் உட்பட அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே காலை மதியம் மாலை நேரங்களில் பரமத்தி வேலூரில் இருந்து நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திக்கும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பரமத்திவேலூர் நிலையம் பஸ் செல்லும் வகையில் புதிய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர். மேலும் பரமத்தியிலிருந்து வழக்கமாக தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் ஒரு சில பேருந்துகளை நேரடியாக புதிய பஸ் நிலையத்திற்கு செல்லாமல் கலெக்டர் அலுவலகம் வரை சென்று மீண்டும் திரும்பி புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் வகையில் வழித்தடத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பரமத்திவேலூர் பகுதி பொதுமக்கள் சார்பாக பரமத்தி நல அறக்கட்டளை மற்றும் 10 ரூபாய் இயக்கம் சார்பாக கலெக்டரிம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.