ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்ட தொடக்க விழா. 

பரமத்தி வட்டாரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்ட தொடக்க விழா.;

Update: 2025-07-08 15:31 GMT
பரமத்திவேலூர், ஜூலை.8:  பரமத்தி வட்டாரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்ட தொடக்க விழா கூடச்சேரி சமுதாயக்கூட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் சுதா மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சின்னதுரை ஆகியோர் தலைமை வகித்தனர். இவ்விழாவில் பரமத்தி ஒன்றிய செயலாளரும், அட்மா திட்ட தலைவருமான தனராசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மரத்துவரை, காராமணி, அவரை அடங்கிய பயறு வகை தொகுப்புகளும், தோட்டக்கலை மலை பயிர்கள் துறையின் சார்பில் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கொத்தவரை, கீரைகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கினார். வழங்கினார். மேலும் கொய்யா, எலுமிச்சை, பப்பாளி உள்ளிட்ட மரக்கன்றுகள் அடங்கிய தொகுப்புகளையும் வழங்கினார். தொடர்ந்து இத்திட்டத்தின் பயன்கள் வேளாண்மை துறை அதிகாரிகளால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன் திட்டத்தின் மூலம் பயனடைய விரும்புவோர் எவ்வாறு வலைத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் அதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை துறை அலுவலர் சுகந்தி, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ரவி, சிவமாணிக்கம், கார்த்திகேயன், பிரகாஷ்ராஜ், உதவி வேளாண்மை அலுவலர் பூபதி வேளாண் வணிக உதவி வேளாண்மை அலுவலர் பாபு மற்றும் பயனாளிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Similar News