கடலூர் விபத்து: எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் இரங்கல்
கடலூர் விபத்து குறித்து எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.;
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த செய்தி ஆழ்ந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்க, பொறுப்பற்றவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.