போச்சம்பள்ளி:மனைவியை தனிமையில் இருக்க அழைத்தவருக்கு அரிவாள் வெட்டு
போச்சம்பள்ளி: மனைவியை தனிமையில் இருக்க அழைத்தவருக்கு அரிவாள் வெட்டு;
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, கோணனுாரை சேர்ந்தவர் அரவிந்தன், இவரது மனைவி கிருத்திகா இவருக்கு 2வது குழந்தை தர்மபுரியில் உள்ள தனது தாய் வீட்டில் பிறந்து அகேயே தங்கியுள்ளர். இந்த நிலையில், அரவிந்தனின் நண்பர் கொடமாண்டப்பட்டியை சேர்ந்த சரண்(25) தர்மபுரியில் இருந்த கிருத்திகாவிடம் தனிமையில் சந்திக்க அழைத்துள்ளார். இதுகுறித்து தனது கணவர் அரவிந்தனிடம் இதுகுறித்து கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அரவிந்தன், நேற்று மதியம் போச்சம்பள்ளி வாரச்சந்தை வளாகத்திற்கு வரவழைத்து சரணை அரிவாளால் வெட்ட முயன்றபோது, அதை இடது கையால் தடுத்த சரணுக்கு, முழங்கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. அங்கிருந்து சரண் தப்பிய ரத்தத்துடன் போச்சம்பள்ளி காவல் நிலையத்திற்கு சென்றார். போலீசார் அவரை மீட்டு, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து, பின்னர் பேச்சம்பள்ளி போலீசார் சந்தை மைதானத்தில் இருந்த அரவிந்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.