கோவை: நெடுஞ்சாலை துறை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் !

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கோவை அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது.;

Update: 2025-07-09 08:31 GMT
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கோவை அரசு ஊழியர் சங்கக் கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் செந்தில்நாதன் முக்கிய தீர்மானங்களை முன்மொழித்தார். மாநில பொதுச்செயலாளர் அன்ஸராஜ், துணைத் தலைவர் சிங்கராயன், ஹரி பாலகிருஷ்ணன், சையது யூசுப், ஜான் உள்ளிட்டோர் கூட்டத்தில் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஜூலை 29ஆம் தேதி மாலை கோட்ட பொறியாளர் அலுவலகங்களுக்கு முன்பு தீப்பந்தம் ஏந்தி தர்ணா போராட்டம், ஆகஸ்ட் 12ஆம் தேதி கருணாநிதி நினைவிடத்தில் உண்ணாவிரதம் ஆகியவை நடத்த தீர்மானிக்கப்பட்டது. நெடுஞ்சாலை பணியாளர்களின் 41 மாதம் பணி நீக்கம் குறித்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அரசு செயல்படுத்தாததை கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Similar News