தொழில், விவசாய வளர்ச்சிக்கு மீண்டும் அதிமுக ஆட்சி தேவை – எடப்பாடி பழனிசாமி உரை
கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.;
கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். தற்போதைய திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, நிலைக் கட்டணம், வரி சுமைகள் உள்ளிட்ட காரணங்களால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் தொழில்கள் வளர்ச்சியை கண்டதாகவும், ஜவுளித் தொழில், பருத்தி விவசாயம் உள்ளிட்டவற்றுக்கு தேவையான ஆதரவை வழங்கியதையும் நினைவூட்டினார். தன்னுடைய ஆட்சியில் விமான நிலைய விரிவாக்கம், விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு, மாற்று நிலம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறினார். பெண்கள் சுய உதவிக் குழுக்கள், கிரில் மற்றும் நகை உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பரிசீலிக்கப்படும் என்றும், சமூக நலத்திட்டங்கள் தொடரும் என்றும் உறுதியளித்தார். திமுக அரசு மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவில்லை என்றும், பிரச்சனைகளை உருவாக்கும் ஆட்சியாக மட்டுமே செயல்படுகிறது என்றும் விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, மக்களின் வாழ்வாதாரம், தொழில் வளர்ச்சி, விவசாய மேம்பாடு ஆகிய அனைத்திலும் மீண்டும் அதிமுக ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும் எனக் கூறினார்.