கும்பாபிஷேகத்திற்காக சரவண பொய்கையிலிருந்து புனித தீர்த்தம்
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சரவண பொய்கையிலிருந்து புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.;
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வரும் ஜூலை.14ம்தேதி திங்கட்கிழமை காலையில் நடைபெறுவதை முன்னிட்டு இன்று (ஜூலை .9)காலை யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலை பகுதியில் வேத மந்திரங்கள் ஒலிக்க யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது.முன்னதாக ஆச்சார்ய தசவித ஸ்நானம் மற்றும் சரவண பொய்கையில் புனித தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.