நிலத்தை தரக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
கோயில் நிலத்தை மீட்டு தரக்கோரி, பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.;
பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில், சாமனூர் கிராம மக்கள் மற்றும் ஊர்கவுண்டர் ஆகியோர் இன்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, பாலக்கோடு அருகே சாமனூர் கிராமத்தில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங் கள் கிராமத்தில் ஊர் மாரி யம்மன், விநாயகர் கோயில் உள்ளது. விநாயகர் கோயில் அருகே கோயிலுக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. அந்த இடத்தை ஊர்மக்கள் திருவிழா காலங்களில் பயன்படுத்தி வந்தோம். இதற்கு முன்னர் இந்த கோயில் இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தோம். நீதிமன்றம் மக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை மீறி கோயிலுக்கு பாத்தியப்பட்ட இடத் தில் அத்துமீறி கட்டிடம் கட்ட முயலுகின்றனர். இது குறித்து மாரண்ட அள்ளி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, கோயில் நிலத்தை மீட்டு, நீதிமன்ற தீர்ப்பை மீறிய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரித்துரை செய்ய வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சர்வே எண்ணிற்கு பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது