நெசப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தேர் திருவிழா , பக்தர்கள் சுவாமி தரிசனம்
நெசப்பாக்கம் பொன்னியம்மன் கோயில் தேர் திருவிழா , பக்தர்கள் சுவாமி தரிசனம்;
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் ஒன்றியம், நெசப்பாக்கம் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலமாக இந்த கிராமத்தில் நடைபெற்றது. இந்த விழாவானது ஜூலை 1 ஆம் தேதி அன்று அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு காப்பு கட்டுகளுடன் விழா தொடங்கியது.இதனை தொடர்ந்து நேற்று இரவு தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் வான வேடிக்கையுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பொன்னியம்மன் தேரில் எழுந்தருளி அந்த கிராமத்தின் முக்கிய வீதிகளில் வளம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். மேலும் பகல் தேர் திருவிழா நடைபெற்றது இதில் ஏராளமான அப்பகுதி மக்கள் பொங்கல் வைத்து ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டு வந்து படையல் இட்டு பொன்னி அம்மனை வழிபட்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து தேர் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் வாகனங்களை இழுத்தும் அலகு குத்தியும் அம்மனை வழிபட்டனர். இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.