நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்!
ஆனி மாதம் (ஜூலை 9 ஆம் தேதி புதன்கிழமை) மூல நட்சத்திரத்தில் நாடு போற்றும் நாமக்கல் நாயகன் அருள்மிகு ஆஞ்சநேயர் பகவான் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்;
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோயில் அமைந்துள்ளது. இங்கு விசேஷ நாள்களில் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம், வெள்ளி கவசம், முத்தங்கி அலங்காரம், புஷ்ப அலங்காரம், வடை மாலை, வெற்றிலை மாலை உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படும். காா்த்திகை, மாா்கழி, தை மாதங்களில் இரவு 7 மணிக்கு மேல் கோயில் நிா்வாகத்தால் சுவாமிக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பதால் ஆஞ்சநேயருக்கு ஆனி மாத மூல நட்சத்திரத்தன்று (ஜூலை 9 ஆம் தேதி புதன்கிழமை )தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார், இதில் திரளான பக்தர்கள் கலந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.