நெடுஞ்சாலையோரம் கோயில் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி அதிகாரிகள்

பெருமா மலை பகுதியில் நெடுஞ்சாலையோரம் கோயில் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி அதிகாரிகள்;

Update: 2025-07-10 00:05 GMT
காங்கேயத்தை அடுத்துள்ள பெருமாள்மலை நெடுஞ்சாலை பகுதியில் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பெருமாள் மலை கிராம மக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். அதில் சிவன்மலை ஊராட்சி பெருமாள்மலை பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்ட நெடுஞ்சாலைத்துறை அனுமதி அளித்ததாக கூறிக் கொண்டு சிலர் அந்த பகுதியில் கோவில் கட்ட முயற்சி செய்து வருகின்றனர். மேலும் அந்த இடத்திற்கு அருகில் குடியிருப்புகள் உள்ளது. அங்கு கோயில் கட்டினால் அன்றாட மக்கள் பயன்பாட்டிற்கு இடையூறாக இருக்கும். மேலும் சாலை விரிவாக்கம் செய்ய உள்ளதாக தெரிகிறது. எனவே பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேறு இடத்தில் கோவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று சிலர் கோவில் கட்டுவதற்காக பணிகளை தொடங்கினர். இதையடுத்து, காங்கேயம் வருவாய் ஆய்வாளர் விதுர்வேந்தன், இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், சிவன்மலை கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நேரில் சென்று நெடுஞ்சாலை பகுதியில் அனுமதி இல்லாமல் பணிகள் ஏதும் செய்யக்கூடாது என தெரிவித்தனர். இதையடுத்து கட்டிட பணிகள் நிறுத்தப்பட்டது.

Similar News