மூலனூரில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை
மூலனூர் பேரூராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை;
மூலனூர் பேரூராட்சியில் தி.மு.க. சார்பில் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இதில் கட்சி உறுப்பினர் புள்ளி விவரங்களைத் துல்லியமாகப் பதிவு செய்து அனைத்துத் தகவல்களையும் மையமாக்கும் நோக்கத்துடன் மாநில அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் மூலனூர் பேரூராட்சியின் 9-வது வார்டு அண்ணாநகர் மற்றும் அறிவொளி நகர் பகுதிகளில் பேரூர் செயலாளர் மக்கள் தண்டபாணி தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று முறையாக பதிவு செய்து கொண்டு உள்ளனர். பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு நான்காண்டு சாதனைகள் குறித்த விளக்கப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் பாலமுருகன், தொழிலாளர் அணி மனோகரன், நிர்வாகிகள் அருண்குமார், குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.