கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளப்புறம் ஊராட்சி, உதயனூர்விளை பகுதியில் பொதுமக்கள் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள வண்டிக்காரவிளைப் பகுதியில் உள்ள ரேசன் கடைக்கு சென்று உணவு பொருட்களை வாங்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் வண்டிக்கார விளை பகுதியில் உள்ள ரேஷன் கடை இரண்டாக பிரித்து உதயனூர் விளைப் பகுதியில் புதிய ரேஷன் கடை, சொந்த கட்டிடம் அமைக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் ராஜேஷ்குமார் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரேஷன் கடை கட்டிடம் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இந்த கடை நேற்று ராஜேஷ்குமார் எம்எல்ஏ திறந்தார். நிகழ்ச்சியில் குளப்புறம் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில் குமார், முஞ்சிறை ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார் , ரேஷன் கடைக்கு கட்டிடம் கட்ட நிலம் இலவசமாக அரசுக்கு தந்த ராதாகிருஷ்ணன் மகன் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.