குமரி மாவட்டம் பாகோடு பகுதி சேர்ந்தவர் ஜான்ரோஸ் மகன் ஐசக் சைமன் (18). இவர் நட்டாலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஜான் ரோஸின் பழைய வீட்டில் சென்று பார்த்தபோது, உத்திரத்தில் சேலையில் தூக்கு போட்டு ஐசக் சைமன் இறந்த நிலையில் காணப்பட்டார். இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டு, போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.