அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது

பெரம்பலூர் மாவட்டத்தை தனிப்படையினர் அமைத்து அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து வருகின்றனர் காவல்துறையினர்;

Update: 2025-07-10 12:56 GMT
அரசால் தடை செய்யப்பட்ட 27.800 கிலோ கிராம் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா இ.கா.ப அவர்கள் பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் மங்களமேடு உட்கோட்டம் மங்களமேடு காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட திருமாந்துறை பகுதியில் உள்ள டோல் பிளாசா அருகே ( ஆவின் பாலகம்) ஓம் சரவணா பவன் ஹோட்டலில் வேலை செய்பவர் அசோகன் 64/25 த/பெ பரமன், வடக்கு தெரு, பழையரசமங்கலம், வடக்கலூர், பெரம்பலூர்.* என்பவர் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில்
தனிப்படையினர் மேற்படி எதிரியை கைது செய்து மங்களமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மங்களமேடு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்கள் மேற்படி எதிரி மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து *1.ஹான்ஸ் (19.500-கிலோ கிராம்), 2.கூல்லீப் (2.898- கிலோ கிராம்), 3.விமல் பாக்கு (3.375-கிலோ கிராம்) 4.V1-பான் மசாலா (1.560-கிலோ கிராம்) மற்றும் 5. RMD பான் மசாலா(480- கிராம்) என மொத்தம்- 27.800 கிலோ கிராம்
ஆகிய குட்கா பொருட்களை பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இரகசியம் காக்கப்படும்.

Similar News