கோவை: தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் முன்னணியின் வேலைநிறுத்த போராட்டம்

கோவை கலெக்டர் அலுவலகம் மற்றும் எல்.ஐ.சி கோட்ட அலுவலகம் முன்பு நேற்று தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.;

Update: 2025-07-10 13:34 GMT
கோவை கலெக்டர் அலுவலகம் மற்றும் எல்.ஐ.சி கோட்ட அலுவலகம் முன்பு நேற்று தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். போலீசார் கேட்டதையடுத்து அவர்கள் சுமூகமாக கலைந்தனர். அதேபோல், எல்.ஐ.சி அலுவலகம் முன்பும், 100% அந்நிய முதலீடு எதிர்ப்பு, பழைய பென்ஷன் திட்டம் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரு இடங்களிலும் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News