தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தகவல்
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான உயர்க்கல்வி, போட்டித்தேர்வுகள், தனியார் துறை வேலைவாய்ப்பு, சுயவேலைவாய்ப்பு ஆகியவை குறித்து தொழில்நெறி வழிகாட்டல் மற்றும் திறன்பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி 10.07.2025 அன்று (முற்பகல்) அரசினர் பாலிடெக்னிக் கீழக்கணவாய் நடைபெற உள்ளது.;
தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தினை முன்னிட்டு பல்வேறு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தகவல். தமிழக அரசு ஒவ்வொரு வருடத்தின் ஜுலை மாதத்தின் இரண்டாம் வாரத்தினை தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் வாரமாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் வாரத்தினை, பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக பல்வேறு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் 15.07.2025 வரை நடத்தப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 09.07.2025 கௌதம புத்தர் மாற்றுத்திறனாளி (செவித்திறன் குறைவுள்ள மாணவர்கள்) பள்ளியில் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான உயர்க்கல்வி, போட்டித்தேர்வுகள், தனியார் துறை வேலைவாய்ப்பு, சுயவேலைவாய்ப்பு ஆகியவை குறித்து தொழில்நெறி வழிகாட்டல் மற்றும் திறன்பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி 10.07.2025 அன்று (முற்பகல்) அரசினர் பாலிடெக்னிக் கீழக்கணவாய் நடைபெற உள்ளது. மகளிருக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி (10.07.2025 அன்று (பிற்பகல்) அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெரம்பலூரிலும், கல்லூரி மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி வேப்பந்தட்டை அரசு கலைக்கல்லூரியிலும் 14.07.2025 அன்று நடைபெற உள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி 15.07.2025 அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர் மற்றும் குன்னத்தில் நடைபெற உள்ளது. ஜுலை இரண்டாவது வாரம் முழுவதும் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தால் நடத்தப்படும் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான வகுப்புகள், மெய்நிகர் கற்றல் வலைதளம் மற்றும் வேலைநாடுநர்களுக்காக துவங்கப்பட்டுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு இணையம் ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி இணையதளத்தில் பதிவு செய்துக்கொள்ள வேலைநாடுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் இந்த நல்லவாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.