வங்கிப் பணியாளர்கள் தேசிய அளவில் போராட்டம் – கோவையில் தர்ணா!
விலைவாசி உயர்வு, தொழிலாளர் எதிர்ப்பு திட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்களை எதிர்த்து, தேசிய அளவிலான வேலைநிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவையில் வங்கிப் பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
விலைவாசி உயர்வு, தொழிலாளர் எதிர்ப்பு திட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்களை எதிர்த்து, தேசிய அளவிலான வேலைநிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவையில் வங்கிப் பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், வங்கி ஊழியர்கள் பேரவை, காப்பீட்டுக் கழகம் ஊழியர்கள் சங்கங்கள் உள்ளிட்ட பல சங்கங்கள் இணைந்து நடத்திய இந்த போராட்டத்தில், பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் பதாகைகள் ஏந்தி, மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். மக்களுக்கு எதிரான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் தொழிலாளர் சட்ட மாற்றங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.