ஆன்லைன் மூலம் வீடு வாடகைக்கு பார்த்துத் தருவதாக மோசடி – பட்டதாரி வாலிபர் கைது!
கோவையில் வாடகை வீடு பார்த்துத் தருவதாக இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்து, பலரை ஏமாற்றி பணம் பறித்த பட்டதாரி வாலிபர் பரத் குமார் கைது செய்யப்பட்டார்.;
கோவையில் வாடகை வீடு பார்த்துத் தருவதாக இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்து, பலரை ஏமாற்றி பணம் பறித்த பட்டதாரி வாலிபர் பரத் குமார் கைது செய்யப்பட்டார். மோசடியில் ஈடுபட்ட பரத் குமார், ஆங்கிலத்தில் எம்.ஏ படித்து முடித்தவர். முன்னதாக ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிய அவர், இன்ஸ்டாகிராம் வழியாக வீடுகள் குறித்த வீடியோக்களை அனுப்பி, முன் பணம் கேட்டுள்ளார். பலரிடமிருந்து ₹5,000 முதல் ₹20,000 வரை பறித்து மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்க, இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில் நடத்திய விசாரணையில் பரத் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 6 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், 6 ஏ.டி.எம் கார்டுகள், 3 சிம் கார்டுகள் மற்றும் ஒரு மொபைல் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அவர் கோவை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டுள்ளார்.