டைரக்டர் உதயா பேட்டி
அக்யூஸ்ட்" திரைப்படத்தின் இன்னொரு ஹீரோ யோகிபாபு!! நடிகரும் டைரக்டருமான உதயா பேட்டி!!;
திருநெல்வேலி, கலகலப்பு, தலைவா ஆகிய படங்களில் நடித்த நடிகர் உதயா கதாநாயகனாக நடித்து இயக்கும் 'அக்யூஸ்ட் ' திரைப்படத்தின் புரோமோ நிகழ்ச்சி ஈரோடு அருகே தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு நடிகர் உதயா சுவாரசியமாக பதிலளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜூலை மாதத்தில் வெளிவரவிருக்கும் அக்யூஸ்ட் திரைப்படத்தில் நான், யோகிபாபு, அஜ்மல், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் நடித்துள்ளனர்.இந்த படம் கதையம்சமுள்ள கமர்சியல் பொழுதுபோக்கு நிறைந்ததாக இருக்கும். நான் நடித்ததிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அக்யூஸ்ட் ஆக சந்தேகத்தின் அடிப்படையில் குற்றவாளியாக்கப்பட்ட ஒருவர் அதிலிருந்து மீண்டு தன்னை நிரூபிக்கிறாரா என்பதுதான் ஒன் லைன் ஸ்டோரி. சென்னை புழல் சிறையில் இருந்து சேலம் சிறைக்கு வரும் வழியில் என்ன நடக்கிறது என்பதை காதல், ஆக்சன், ரொமான்ஸ் கலந்து ரசிகர்களை ஈர்க்கும் வகையில் படத்தின் ஹீரோவாக நடித்து முதன்முதலாக நான் டைரக்ஷன் செய்திருக்கிறேன். எனது நண்பர்கள் பன்னீர்செல்வம், தங்கவேலு உள்ளிட்டோர் படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தை பார்த்து விட்டு வருபவர்களுக்கு ஒரு எமோஷனல் ஃபீலிங் கட்டாயம் ஏற்படும். இந்த படத்தின் ரிவ்யூ ஷோ பார்த்த எல்லோரும் வெகுவாக பாராட்டியுள்ளார்கள். சண்டை காட்சிகளை ஸ்டண்ட் சிவா எடுத்திருக்கிறார். பஸ்ஸில் நடக்கும் சண்டைக்காட்சியை 1.25 கோடி ரூபாய் செலவில் எடுத்திருக்கிறோம். அது ரசிகர்களிடம் பெரிய பாராட்டை பெறும். எடிட்டிங் பர்வீன் போன்ற முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி உள்ளதால் இந்தப் படம் பிரமாதமாக வந்துள்ளது. கேள்வி: சமீபத்தில் வெளிவந்த ரப்பர் பந்து, டூரிஸ்ட் பேமிலி போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் பெரிய வெற்றியும், இந்தியன் 2, கங்குவா, தக்லைஃப் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியை தழுவுவதும் எதைக் காட்டுகிறது? பதில்: ஒரு திரைப்படத்துக்கு எவ்வளவு செலவு செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அது பெரிய பட்ஜெட், சின்ன பட்ஜெட் படமா என்பதை விட கதைக்காக எவ்வளவு மெனக்கெடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். திரைப்படத்தின் வெற்றிக்கு அந்தப் படத்தின் கதை (கன்டென்ட்) தான் முக்கிய காரணம். பொதுவாக பெரிய நடிகர்களுக்கு கொடுக்கும் சம்பளம் தான் பட்ஜெட் அதிகரிக்க காரணமாக இருக்கும். மற்றபடி நல்ல கன்டென்ட் அமைந்து விட்டால் அதற்கு செலவு செய்வதால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை.ஜனங்களுக்கு நல்ல கதையம்சமுள்ள படங்களை கொடுத்தால் உதாரணமாக மாமன் போன்ற திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஆக்சன், சென்டிமென்ட், திரில்லர், குடும்ப சித்திரம் என எந்த கதையை வைத்து திரைப்படம் தயாரித்தாலும் மக்களுக்கு பிடித்து விட்டால் அதை ரசிக்க தவறுவதில்லை. வெற்றி பெற செய்து விடுவார்கள். அந்த வகையில் அக்யூஸ்ட் திரைப்படத்தின் கதை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் வெற்றியும் பெறும் என்று நம்புகிறேன்.கடந்த 25 ஆண்டுகளாக நான் அதிக படங்களில் நடிக்கவில்லை. நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்திருக்கிறேன். நல்ல கதையை தேர்வு செய்திருப்பதால் 'அக்யூஸ்ட்' பெரும் வெற்றியடையும் என்று நம்புகிறேன். கேள்வி: படத்தின் கதாநாயகி பற்றி கூறுங்கள்? கன்னடத்தில் இருந்து வந்துள்ள ஜான்விகா சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்.படம் முழுவதும் யோகிபாபு வருகிறார். அவரும் இன்னொரு ஹீரோ போல தான் படத்தில் பெர்ஃபாமன்ஸ் செய்திருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.