பேருரணி காவல் பயிற்சி பள்ளியில் அணிவகுப்பு விழா!
தூத்துக்குடி பேருரணி காவல் பயிற்சி பள்ளியில் காவலர்களின் பயிற்சி நிறைவு பெற்றதை முன்னிட்டு அணிவகுப்பு விழா நடைபெற்றது.;
தூத்துக்குடி பேருரணி காவல் பயிற்சி பள்ளியில் காவலர்களின் பயிற்சி நிறைவு பெற்றதை முன்னிட்டு அணிவகுப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடி பேருரணியில் உள்ள காவல் பயிற்சி பள்ளியில் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி முதல் 468 பயிற்சி காவலர்களுக்கு 7 மாத கால அடிப்படை பயிற்சி கவாத்து மற்றும் சட்டம் பற்றிய வகுப்புகள் நடத்தப்பட்டது. பயிற்சி காவலர்களின் பயிற்சி நிறைவு பெற்றதை முன்னிட்டு அணிவகுப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு சென்னை. தலைமை அலுவலக பணியமைப்பு காவல் துறை தலைவர் கே.எஸ்.நரேந்திரன் நாயர் தலைமை தாங்கி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர்-காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரி வரவேற்றார். பயிற்சி காவலர்களின் வீர விளையாட்டு மற்றும் தனித்திறன் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. சட்ட பயிற்சி, கவாத்து பயிற்சி, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட பயிற்சி காவலர்களுக்கு காவல்துறை தலைவர் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பயிற்சி பள்ளி காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரி, துணை காவல் கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன் மற்றும் முதன்மை சட்ட போதகர், முதன்மை கவாத்து போதகர் ஆகியோர் செய்திருந்தனர்.