தமிழகத்தில் முதல் முறையாக கோவையில் 'டிஜிட்டல் இந்தியா' பயிற்சி!
மத்திய அரசின் டிஜிட்டல் பப்ளிக் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பயிற்சி நிகழ்ச்சி, தமிழகத்தில் முதல் முறையாக கோவை மாவட்டம் அரசூரில் உள்ள கே.பி.ஆர். தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.;
மத்திய அரசின் டிஜிட்டல் பப்ளிக் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பயிற்சி நிகழ்ச்சி, தமிழகத்தில் முதல் முறையாக கோவை மாவட்டம் அரசூரில் உள்ள கே.பி.ஆர். தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் நாட்டின் பல மாநிலங்களைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இணைய சேவைகள், ஆதார் பயன்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்மார்ட் கவர்ன்மென்ட் அமைப்பைச் சேர்ந்த சாமு, ஏழை, எளிய மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த பயிற்சி கிராமப்புறத்தில் நடத்தப்பட்டது என்றார்.