மாவீரனுக்கு யாதவ இளைஞர் சங்கம் சார்பாக மரியாதை
மதுரை மேலூரில் அழகு முத்துக்கோன் படத்திற்கு யாதவ இளைஞர் சங்கம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது.;
மதுரை மாவட்டம் மேலூரில் முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் 268 வது குருபூஜை முன்னிட்டு யாதவர் இளைஞர் நலச்சங்கம் சார்பில் மேலூர் தாலுகா இளைஞரணி தலைவர் தனபாலன் தலைமையில் மேலூர் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டு இருந்த வீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந நிகழ்ச்சியில் மேலூர் துணைத்தலைவர் பிரபாகரன், செயலாளர் ராஜேஷ், துணைச் செயலாளர் கே.சுரேந்திரன், பொருளாளர் ராஜ பிரபு, கவுன்சிலர் மனோகரன், மற்றும் செயற்குழு, பொதுக்குழு நிர்வாகிகள், பொதுமக்கள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.