தனியார் பள்ளி ஆங்கில ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்!

தூத்துக்குடி மாவட்டத்தில், தனியார் பள்ளிகளில் ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்களுக்கான ஒருநாள் பணியிடை பயிற்சி முகாம் பி.எம்.சி. பள்ளியில் நடைபெற்றது. ;

Update: 2025-07-11 15:13 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில், தனியார் பள்ளிகளில் ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்களுக்கான ஒருநாள் பணியிடை பயிற்சி முகாம் பி.எம்.சி. பள்ளியில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில், தனியார் பள்ளிகளில் ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்களுக்கான ஒருநாள் பணியிடை பயிற்சி முகாம் பி.எம்.சி. மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பயிற்சி முகாமினை மாவட்டகல்வி அதிகாரி (தனியார் பள்ளிகள்) சிதம்பரநாதன் துவங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். பள்ளி முதல்வர் பால்கனி அனைவரையும் வரவேற்றார். முகாமில் பயிற்சியாளர்களாக அருண்குமார், முதல்வர் ஜி.கே. விநாயகா வித்யாலயா எட்டையாபுரம், பெங்களுரை சேர்ந்த பயிற்சியாளர்கள் வர்ஷா மற்றும் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்று ஆசிரியர்களுக்கு, ஆங்கில இலக்கண பயிற்றுவிக்கும் முறை, ஆங்கில மொழி வகுப்பறையை மேம்படுத்தல், விளையாட்டு முறையில் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தல் ஆகிய தலைப்புகளில் பயிற்சியளித்தனர். இப்பயிற்சி முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தின் தனியார் பள்ளிகளிலிருந்து சுமார் 180 ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இப்பயிற்சி முகாமினை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) வழிகாட்டுதலின்படி காஞ்சி ஸ்ரீ சங்கரா அகடாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் இரா. செல்வவைஷ்ணவி, ஸ்ரீகாமாட்சி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி முதல்வர் மீனாகுமாரி, பி.எம்.சி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வர் கோ. பால்கனி ஒருங்கிணைந்து நடத்தினர்.

Similar News