ஈரோடு மாவட்டம் கோபி போலீசார் தடப்பள்ளி வாய்க்கால் அருகே ரோந்து சென்றனர். அப்போது, அங்கு டாஸ்மாக் கடைகள் மூடிய நேரத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த சேகர் (49) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 38 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஈரோடு அடுத்த கங்காபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்றதாக பேரோடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (45) என்பவரை சித்தோடு போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 325 கிராம் புகையிலை, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.