பவானியில் அதிகபட்ச மழை
ஈரோடு புறநகர் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை பவானியில் அதிகபட்சமாக 33 மி.மீ பதிவு;
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கடந்த மூன்று நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் 101 டிகிரி வெயில் பதிவாகி வந்தது. காலை தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை வரை நீடிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் முதியவர்கள் குழந்தைகள் அவதி அடைந்து வந்தனர். அனல் காற்றுடன் ஒழுக்கம் நிலவியதால் மக்கள் திணறி வந்தனர்.இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மாலை கருமேகங்கள் சூழ மழை பெய்யத் தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் 40 நிமிடம் பரவலாக மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலையில் தேங்கி நின்றன. இதைப்போல் பவானி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 33 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதேபோல் நம்பியூர் அதன் சுற்று வட்டார பகுதியில் வரட்டு பள்ளம் குண்டேரி பள்ளம் சென்னிமலை பெருந்துறை பகுதிகளும் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-பவானி - 33.60, நம்பியூர் - 21, வரட்டு பள்ளம் - 9, அம்மாபேட்டை - 6.40, சென்னிமலை - 6.20, ஈரோடு - 5, குண்டேரி பள்ளம் - 4.20, பெருந்துறை - 4.