நெடுஞ்சாலையில் கரடிகள் குட்டியுடன் உலா
அம்மன் கோவில் அருகே நெடுஞ்சாலையில் குட்டிகளுடன் சாலையை கடந்து சென்ற கரடியால் வாகன ஓட்டிகள் அச்சம்;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி அம்மன் கோவிலுக்கு கர்நாடகா மாநிலத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலை வனப்பகுதியில் அமைந்துள்ளது. பண்ணாரி அம்மன் கோவில் அருகே உள்ள நெடுஞ்சாலை ஓரம் யானை, சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் சென்று வந்தனர்.இந்நிலையில் நேற்று வழக்கம் போல் சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வனப் பகுதியை விட்டு வெளியேறிய கரடி ஒன்று தனக்கு குட்டிகளுடன் சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சாலையோரம் நின்றது. திடீரென கரடி குட்டியுடன் சாலை விவரம் நின்றதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். வாகன ஓட்டிகள் சற்று தொலைவில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டனர். சிறிது நேரம் குட்டிகள் உடன் விளையாடிய கரடி பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. கரடி குட்டிகளுடன் விளையாடிய காட்சியை அங்கிருந்த வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். சக்தி -மைசூர் நெடுஞ்சாலையில் அடிக்கடி யானை சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்த நிலையில் திடீரென கரடி நடமாட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குட்டிகளுடன் செல்லும் கரடி மிகவும் ஆபத்தானவை. வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். அவைகளுக்கு எந்த ஊர் தொந்தரவும் அளிக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.