புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை

புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை;

Update: 2025-07-12 06:56 GMT
செய்யூர் தொகுதியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி எம்.எல்.ஏ., எம்.பி பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடப்பாக்கம் 15-வது வார்டு பகுதியில் நியாய விலை கடை கட்டிடம் கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் பத்து லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடும் பணி பேரூராட்சி தலைவர் சம்யுக்தா தலைமையில் போரூர் செயலாளர் மோகன்தாஸ் முன்னிலையில் நடைபெற்றது.இதில் சிறப்பாக அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடும் பணியை தொடங்கி வைத்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பல கலந்து கொண்டனர்.

Similar News