மாற்றுத்திறனாளின் வாழ்வுரிமை நலவாழ்வு சங்கத்தின் ஆலோசனை கூட்டம்

சங்கத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், தமிழக அரசு வழங்கும் மாற்று திறனாளிகளுக்காக நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் உதவி செய்திட . வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விவாதித்து தீர்மானம் இயற்றப்பட்டது.;

Update: 2025-07-12 12:54 GMT
பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளின் வாழ்வுரிமை நலவாழ்வு சங்கத்தின் ஆலோசனை கூட்டம் இன்று பெரம்பலூரில் சங்கத்தின் அலுவலக கட்டிடத்தில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலாளர் சபியுல்லா, பொருளாளர் உதிரம் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். .கூட்டத்தில் சங்கத்தின் சார்பில் புதிய மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெறுதல். பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய 4 சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியரை மரியாதை நிமித்தமாக சந்தித்தல், சங்கத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், தமிழக அரசு வழங்கும் மாற்று திறனாளிகளுக்காக நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் உதவி செய்திட . வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விவாதித்து தீர்மானம் இயற்றப்பட்டது கூட்டத்தில் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் நூத்தப்பூர் சுப்ரமணியன் துணை தலைவர்கள் மீனாட்சி, வேல்முருகன், துணை செயலாளர்கள் தேவி, பாப்பாத்தி. மகளிர் அணி தலைவி மின்னல்கொடி , மகளிர் அணி செயலாளர் மேகலா , தலைமை ஆலோசகர் சங்கீதா , சங்க ஆடிட்டர் பாவா பக்ருதீன் உட்பட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News