உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு

மதுரை திருப்பரங்குன்றத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்;

Update: 2025-07-12 15:06 GMT
மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் Dr. செல்வராஜ் உத்திரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர் கள் ராஜேந்திரன் , மோகன் ஆகியோர் திருப்பரங்குன்றம் பெரியரத வீதி, கீழரத வீதி, மேல ரதவீதி சன்னதி தெரு பகுதிகளில் உள்ள டீ கடை, வடை கடை, ஹோட்டல் ஆகியவற்றில் ஆய்வு செய்தனர். கலப்பட டீ தூள், வடை கடைகளில் பேப்பரில் வடை வழங்க கூடாது. இலை சில்வர் தட்டுகளில் மட்டுமே வடைகளை வழங்க வேண்டும் என அறிவுருத்தினர். கடைகளை சுகாதார மற்ற முறையில் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தூய்மையாக பராமரிக்கவும் அறிவுறுத்தினர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திருவிழாக்காலங்களில் கடைகளில் கலப்பட பொருட்கள் எதுவும் விற்பனை செய்யாமல் தடுக்கவும், பொது மக்களுக்கு கலப்பட பொருட்களால் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Similar News