தளபதி அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
குமாரபாளையம் தளபதி அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் முதல் ஆலோசனை கூட்டம் நடந்தது.;
குமாரபாளையம் தளபதி அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் முதல் ஆலோசனை கூட்டம் பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமையில் நடந்தது. தலைவர் சிவராமன் வரவேற்றார். செயலர்கள் நீலகண்டன், காயத்ரி முன்னிலை வகித்தனர். உடனடி முன்னாள் தலைவர் கதிர்வேல். தலைமையிலான குழுவினர், கடந்தாண்டு சிறப்பாக செயல்பட்டு 14 விருதுகள் பெற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் பணி சிறக்க முக்கிய பிரமுகர்கள் பலரும் வாழ்த்தி பேசினர். கடந்த நான்கு ஆண்டுகளாக பசிப்பிணி போக்கும் பிரிவு மாவட்ட தலைவர் சண்முக சுந்தரத்திற்கு 324 மண்டல மாவட்டத்தின் மூன்றாவது இடம் பரிசு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. கண் சிகிச்சை முகாம், ரத்த தானம் மற்றும் ரத்த பரிசோதனை முகாம், இதய சிகிச்சை முகாம், பெண்கள் மற்றும் குழந்தைகள் சிகிச்சை முகாம், பொது மருத்துவ சிகிச்சை முகாம் நடத்துவது, அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்குதல், ஏழை மாணாக்கர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குதல் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் தலைவர் மாதேஸ்வரன் நன்றி கூறினார்.