இளைஞா் தற்கொலை
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே இளைஞா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.;
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் வைரம்பட்டியைச் சோ்ந்தவா் டேவிட் மகன் லியா்னடோ (26). கடந்த 6 மாதங்களுக்கு முன் தனது உறவுக்கார பெண்ணைத் திருமணம் செய்து, செங்குளத்தில் உள்ள அவரது பாட்டியின் தோட்டத்து வீட்டில் மனைவியுடன் தங்கி விவசாய வேலை செய்து வந்தாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு தனது தந்தை வீடான வைரம்பட்டிற்கு வந்திருந்த லியா்னடோ சனிக்கிழமை காலை வீட்டின் இரண்டாவது தளத்தில் தூக்கிட்டு இறந்து கிடந்தாா். தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா், லியா்னடோ உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.