விபத்து ஏற்படுத்திய லாரி பொதுமக்கள் போராட்டம்

துவரங்குறிச்சி அருகே சனிக்கிழமை விபத்து ஏற்படுத்திவிட்டு டிப்பா் லாரி நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.;

Update: 2025-07-12 20:10 GMT
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் மான்பாஞ்சன்பட்டியிலிருந்து வீ.கிருஷ்ணன் என்பவா் சனிக்கிழமை ஆலம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் மான்பஞ்சான்பட்டி பெரியதம்பி தோட்டம் அருகே சென்றபோது, சீகம்பட்டியில் உள்ள கிரஷருக்கு சென்ற அடையாளம் தெரியாத டிப்பா் லாரி உரசிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கீழே விழுந்த கிருஷ்ணன், சிராய்ப்பு காயங்களுடன் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் உறவினா்கள், அவ்வழியாக கிரஷருக்கு சென்ற லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற காவல் உதவி ஆய்வாளா் குடுமிநாதன் தலைமையிலான போலீஸாா்,சமரசம் செய்ததையடுத்து கலைந்து சென்றனா்.

Similar News