காவல் ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம் முன்னிட்டு காவல்துறையினர் ஆலோசனை கூட்டம் காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்றது;
முருகனின் முதல்படைவீடான திருப்பரங்குன்றம் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா நாளை 14.07.2025 அன்று நடைபெற உள்ள நிலையில், அதனைக் காண வரும் இலட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி, நேற்று (12.07.2025) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு.ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்கள் தலைமையில், திருவிழாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. காவல் துணை ஆணையர் (தெற்கு),காவல் துணை ஆணையர் (வடக்கு), காவல் துணை ஆணையர் (போக்குவரத்து), காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), காவல் துணை ஆணையர் (ஆயுதப்படை) ஆகியோர் உடனிருந்தனர்.