காட்டுப் பன்றி பிரச்சனை: கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு – உடனடி நடவடிக்கையில் வனத்துறை!

காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் அறிவித்ததும் வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.;

Update: 2025-07-13 05:17 GMT
கோவை பி.என்.புதூரில் பொதுமக்களை அச்சுறுத்தும் காட்டுப் பன்றிகளை பிடிக்க வலியுறுத்தும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கிளைக் கூட்டம் 10.07.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் வனத்துறையினர் கடந்த மே 30 அன்று மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட திட்டத்தை உடனடியாக செயல்படுத்தக் கோரப்பட்டது. அதேசமயம், மனித-விலங்கு மோதலை தவிர்க்கும் முன்முயற்சியாக, ஜூலை 15ஆம் தேதி மாலை 5 மணிக்கு CPI அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, வனத்துறை தற்போது காட்டுப் பன்றிகளை பிடிக்க கூண்டுகள் வைத்து கண்காணிப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

Similar News