உத்தனப்பள்ளி அருகே கலவை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு.

உத்தனப்பள்ளி அருகே கலவை இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு.;

Update: 2025-07-13 11:04 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மாசிமாரண்டி(19) அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்துள்ள பி.மாரண்டப்பள்ளியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஹாலோ பிரிக் கலவை இயந்திரத்தை சுத்தம் செய்துக்கொண்டிருந்த அப்போது கர்நாடகா மாநிலம், ஆனைக்கல்லை சேர்ந்த வெங்கடேசன் (25) என்பவர் கலவை இயந்திரத்தை இயக்கிய போது இயந்திரத்தில் சிக்கி மாசிமாரண்டி பலத்த காயமடைந்த அவரை மீட்டு ஓசூர் தனியார் மருத்துவமனையில் கொண்டுசென்ற போது அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து இயந்திரத்தை இயக்கிய வெங்கடேசனை கைது செய்தனர் பின்னார் அவரை ஜாமினில் விடுவித்தனர்.

Similar News