புகையிலை விற்பனை செய்தவர் கைது.
பரமத்தி வேலூரில் புகையிலை விற்பனை செய்தவர் போலீசார் கைது செய்தனர்.;
பரமத்திவேலூர், ஜூலை.13: பரமத்திவேலூர் 4 ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்களை டீக்கடையில் விற்பனை செய்து வருவதாக பரமத்தி வேலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் பரமத்தி வேலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட 4 ரோடு பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஒரு டீ கடைக்கு சென்று சோதனை செய்த போது அங்கு தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் 15 கிலோ எடையுள்ள ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். புகையிலை பொருட்களை விற்பனை செய்த பரமத்தி வேலூர் கைகோளர் தெருவை சேர்ந்த சக்திவேல் (47) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.