ஒசூர் அருகே டூவீலரில் குட்கா கடத்திய வாலிபர் கைது.
ஒசூர் அருகே டூவீலரில் குட்கா கடத்திய வாலிபர் கைது.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஒசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அத்திப்பள்ளியிலிருந்து டூவீலரில் வந்த நபரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் அவர் டூவீலரில் 17 கிலோ குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஷமிம் அகமது (20) என்பதும் ஓசூர் பேகேப்பள்ளியில் தங்கி இருந்து குட்கா கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து குட்கா மற்றும் டூவீலரை போலீசார் பறிமுதல் செய்தனர்.