தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-07-14 08:43 GMT
அரியலூர், ஜூலை 14- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், அரசு மருத்துவமனைகளில், மாவட்ட நல்வாழ்வு சங்கங்கள் மூலம் செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை 11 மாத தற்காலிக ஒப்பந்த முறையில் பணியமரத்தும் முடிவை கைவிட வேண்டும். கரோனாவுக்குப் பிறகு பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 700}க்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும். நிரந்தர தன்மையுடைய பணியிடங்களை உருவாக்கிட வேண்டும் .சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ராகவன், மாவட்டச் செயலர் செல்வி,அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வேல்முருகன், மாவட்டச் செயலர் ஷேக்தாவூத், பொருளாளர் பைரவன், நிர்வாகிகள் விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி, முழக்கமிட்டனர்.

Similar News