கோவை: பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்ததற்கு தொகை வழங்காததை கண்டித்து முற்றுகை போராட்டம் !

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்தவர்கள், 43 ஆண்டுகளாக தங்களுக்கு வழங்க வேண்டிய 30 கோடி ரூபாய் இழப்பீடு தொகை இதுவரை அரசு வழங்காததை கண்டித்து கூட்டம் நடத்தப்பட்டது.;

Update: 2025-07-14 12:23 GMT
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்தவர்கள், 43 ஆண்டுகளாக தங்களுக்கு வழங்க வேண்டிய 30 கோடி ரூபாய் இழப்பீடு தொகை இதுவரை அரசு வழங்காததை கண்டித்து நவாவூர் காமாட்சியம்மன் கோவில் திடலில் கூட்டம் நடத்தினர். இதில், உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், எந்த அரசும் அவர்களின் கோரிக்கையை பார்வையிடவில்லை என்றும் தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் குறித்த பகுதியில் பேசியபோதும் இது குறித்து எதுவும் கூறவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது. கூட்டத்தில், ஆகஸ்ட் 4ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றும், அதன் பின்னும் தீர்வு வராவிடின் சட்டமன்றத் தேர்தலை நிலம் கொடுத்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் புறக்கணிப்பார்கள் என்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. ஓணப்பாளையம், பொம்மணம்பாளையம், சுல்தானின்புரம், நவாவூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பலர் இதில் கலந்து கொண்டனர்.

Similar News