மருத்துவ மாணவி மரணம்: ஆதி திராவிடர் ஆணையம் விசாரணை தொடங்கியது!

கோவையில் மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், தொடர்பாக ஆதிதிராவிடர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.;

Update: 2025-07-14 12:25 GMT
கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி முதுகலை மாணவி பவபூரணி மரணத்தில் மர்மம் நீடிக்கிறது. நாமக்கலை சேர்ந்த அவர், 6ம் தேதி கழிவறையில் மரணமடைந்த நிலையில் காணப்பட்டார். மரணம் சந்தேகத்திற்குரியது என போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பவபூரணி பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணையம் தாமாக விசாரணை துவங்கியுள்ளது. ஆணைய உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் 11ம் தேதி சம்பவ இடம் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தியனர். சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிரிஞ்ச், மருந்து மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. மாணவியின் தந்தை, மரணத்திற்கு முந்தைய இரவில் மகளுடன் யாரோ சண்டையிட்டதாகவும், மரண மர்மம் தெளிவாக, பெண் அதிகாரி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Similar News