சுல்தான் பேட்டையில் மரநாய்க்குட்டி மீட்பு !
மாட்டுத்தொழுவத்தில் மயங்கி கிடந்த ஒரு மாதம் ஆன மரநாய்க்குட்டி மீட்பு.;
கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஜே.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த விவசாயி மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் வேலு மந்திராசலம், தனது தென்னந்தோப்பில் உள்ள மாட்டுத்தொழுவத்தில் மயங்கி கிடந்த ஒரு மாதம் ஆன மரநாய்க்குட்டியை கண்டார். இடது கண்ணில் காயம் இருந்த குட்டிக்கு ‘இங்க் பில்லர்’ மூலம் பால் கொடுத்து உயிர் காக்க உதவினார். பின்னர் இது குறித்து பொள்ளாச்சி வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மரநாயை மீட்டுச் சென்றனர்.